மின்சாரம் இன்மையால் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பெறும் சிறமபடும் வைத்தியர்களும் நோயாளர்களும்டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் 30.08.2018.வியாழகிழமை இரவில் இருந்து மின்சாரம் தடைபட்டுள்ளமையால் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் முதல் நோயாளர்கள் வரை பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கபடுகிறது
30.08.2018.வியாழகிழமை இரவு வேலையில் டிக்கொயா கிழங்கன் பகுதியில் மூங்கில் மரம் ஒன்று முறிந்து மின்கம்பம் மீது விழுந்தமையால் இந்த மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இதனால் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுமதிக்க வருகின்ற நோயாளர்களை வைத்தியசாலையின் உத்தியோகத்தா்கள் சக்கர நாற்காலியில் வைத்து தூக்கிகொண்டு செல்லும் நிலமையே காணபடுவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மின்சாரம் தடைபட்டுள்ளமையால் லிவ்ட்வசதிகள் ஏதுவும் இயங்காத நிலையில் காணபடுவதாகவும் தற்பொழுது மின் இயக்கியினாலே வைத்திய சாலையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது
இந்த மின்சார தடை டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அடிக்கடி ஏற்படுவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் மேலும் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)