கிழட்டு மைனாவின் அருமை தற்போது புரிகிறது!

0
7

தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளால் மஹிந்த ராஜபக்சவுக்கான மவுசு எகிறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

”அன்றும், இன்றும், என்றும் எனது அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்சதான். சிலிண்டரில் நான் வாக்குகேட்டவேளையிலும் இதனை பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தேன். மஹிந்தபோன்றதொரு அரசியல் தலைவர் மீள உருவாகப்போவதில்லை. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மஹிந்தவுக்குரிய பெறுமதி அதிகரித்துள்ளது.

எமது ஆட்சி இருந்திருந்தால் மஹிந்தவை கிழட்டு மைனா எனவும், நாமலை குட்டி மைனா எனவும் தேசிய மக்கள் சக்தியினர் விமர்சித்திருப்பார்கள். அன்று எம்மை இப்படி விமர்சித்தவர்களுக்கு மக்கள் இன்று சமூகவலைத்தளங்களில் சிறப்பான பதிவுகளை பதிவிட்டுவருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆட்சியை வழங்கியது நல்லது. இப்போது யதார்த்தம் புரிந்திருக்கும். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு எமது கட்சி ஆதரவாளர்களே காரணம். அவர்களும் உண்மையை புரிந்துகொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவை விரைவில் களுத்துறைக்கு அழைத்துவருவேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here