ஹட்டன் பகுதியில் கிவ்.ஆர்.கோட் முறைக்கமைய நேற்று (31) எரிபொருள் விநியோகம் இடம்பெற்றன. அரசாங்கம் அனைவருக்கும் எரிபொருள் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் பதுக்கல் கள்ளச் சந்தை, வரிசை உள்ளிட்ட விடயங்களை தவிர்க்கும் முகமாக நாளை முதல் கிவ்.ஆர்.கோட் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது இந்நிலையில் இன்று முதலே ஹட்டன் பகுதியில் கிவ்.ஆர்.கோட் முறைக்கமைய எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதற்கமைய இன்று மோட்டார் சைக்கிலுக்கு நான்கு லீற்றர்களும், முச்சக்கரவண்டிக்கு ஐந்து லீற்றர்களும், கார் மற்றும் வேன்களுக்கு 20 லீற்றர் பெற்றோலும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. கடந்த சில காலங்களில் குறித்த எண்ணை நிரப்பு நிலையங்களில் வாகனங்களில் இறுதி இலக்கங்களுக்கு அமையவே எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதிலும் எரிபொருள் பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் ஒரு நிலையே காணப்பட்டன இதனால் வரிசையும் நீண்டு சென்றன எனினும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட கிவ்.ஆர் முறைபடி வாரம் ஒரு தடைவை மாத்திரம் பெற்றோல் டீசல் பெற்றுக்கொடுக்கப்படுவதனால் அனைவருக்கும் பெற்றோல் மற்றும் டீசல் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் இது ஒரு நல்ல முறையென்றும் ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.
இதே நேரம் ஆட்டோ சாரதிகளுக்கு வாரத்திற்கு ஐந்து லீற்றர் பெற்றோல் மாத்திரம் பெற்றுக்கொடுக்கப்படுவதனால் தங்களது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். வாரத்திற்கு மோட்டர் சைக்கில் மற்றும் ஆட்டோ பெற்றோல் பெற்றுக்கொடுக்கும் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்