கீரி சம்பா அரிசி பற்றாக்குறை; மாற்று அரிசி இறக்குமதிக்கு தீர்மானம்

0
44

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில், சந்தையில் கீரி சம்பாவுக்கு மட்டுமே பற்றாக்குறை நிலவுவதாகவும், இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் மாற்று அரிசி வகையான GR11 இன் 40,000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பற்றாக்குறை மோசமடைந்தால் இறக்குமதி முடிவு செயல்படுத்தப்படும் எனவும், தற்போதைய சிறுபோக அறுவடையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலன்னறுவை களஞ்சியசாலைகளில் 85,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா இருப்பதாகவும், அதில் ஒரு தொகையை சந்தைக்கு விடுவித்தால் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இல்லையெனில், வெளிநாடுகளில் இருந்து கீரி சம்பாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here