’குடம்புளி’ என்றால் என்ன? சமையலில் சேர்த்தால் கிடைக்கும் சகல ஆரோக்கிய நன்மைகள்

0
149

குடம்புளி எடுத்துகொள்வதன் மூலம் குடல் இயக்கம் சீராகிறது. குடம்புளி என்பது கோக்கம் புளி என்றும் அழைக்கப்படுகிறது. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக பலரும் அன்றாடச் சமையலில் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது பெரிய பல்பொருள் அங்காடிகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

குடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.குடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும்.

காரக் குழம்பு, மீன் குழம்பு, ரசம், சாம்பார் என வழக்கமாகப் புளி சேர்த்து சமைக்கும் அத்தனை உணவுப் பொருட்களிலும் குடம் புளியை சேர்க்கலாம்.

குடம்புளி எடுத்துகொள்வதன் மூலம் குடல் இயக்கம் சீராகிறது.

குடம்புளியில் இருக்கும் கார்சினோல் ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here