மருந்து பிரச்சினைகள் மாத்திரமின்றி மக்களின் தலை மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள் காரணமாக அவர்கள் நோயாளிகளாக மாறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக துரிதமாக மக்களை அணித்திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க போவதாக தேசிய மக்கள் சக்தயின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் மக்களுக்கு விளக்கும் கூட்டங்களையும் நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மருந்து பிரச்சினைகள் மாத்திரமின்றி மக்களின் தலை மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள் காரணமாக அவர்கள் நோயாளிகளாக மாறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் வரி விதிப்புகளை அதிகரித்துள்ளதால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.மேலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இப்படியான நிலைமையில் மக்களின் அத்தியவசிய தேவையான குடிநீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது அவர்களை சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த நிலைமைக்குள் தள்ளியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம்,மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகிறது எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.