கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட பூண்டுலோயா சீன் தோட்ட குடும்பநல உத்தியோகத்தர் மற்றும் நலன்புரி உத்தியோகத்தரை மாற்றக்கோரி மூன்றாவது நாளாகவும் சீன் மேல்பிரிவு,சீன் கீழ்ப்பிரிவு,பழையதோட்டம் மேல்ப்பிரிவு,பழையத்தோட்டம் கீழ்பிரிவு மக்கள் பணி பகீஸ்பகரிப்பை கடந்த சனிக்கிழமை முதல் மூன்றாவது நாளாவது முன்னெடுத்து வருகின்றனர்.
சீன் மேல்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கர்ப்பிணி பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு வழியிலேயே சிசு இறந்து பிறந்துள்ளது.இதற்கு முழு காரணமும் தோட்ட குடும்பநல உத்தியோகத்தரும்,நலன்புரி உத்தியோகத்தருமே காரணமென்ற குற்றச்சாட்டை முன்வைத்தே தோட்ட மக்கள் பணி பகீஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
அதாவது குறித்த கர்பிணி பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தோட்ட அம்புலன்ஸ் வண்டியை கேட்போது குடும்பநல உத்தியோகத்தரும், நலன்புரி உத்தியோகத்தரும் அசமந்த போக்கில் பதில் கூறியமைக்காகவும் கர்ப்பிணி பெண்ணின் மீது எவ்வித அக்கறையும் இன்றி செயற்பட்டமையினாலேயே சிசு வயிற்றிலேயே வரும் வழியில் இறந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டே தோட்ட மக்கள் பணி பகீஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதி குடும்பநல உத்தியோகத்தரையும், நலன்புரி உத்தியோகத்தரையும் இடமாற்றும் வரை பணிபகீஸ்கரிப்பு தொடருமென குறித்த தோட்ட மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்