குத்தகைக்கு வழங்கப்படும் யாழ் ஜனாதிபதி மாளிகை

0
149

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகை வளாகத்தை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகை வளாகம் 29 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள நிலையில், 12 ஏக்கரில் கட்டிடத் தொகுதி அமைந்துள்ளது.எஞ்சிய நிலம் அகுறித்த பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட காணியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், உரிய குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் ஜனாதிபதி மாளிகை வளாகம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here