குப்பையில் குவியும் மரக்கறி!

0
552
நுவரெலியாவில் மரக்கறி வகைகளின் நிரம்பல் அதிகரித்துள்ளதால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைகளில் அதிகப்படியான மரக்கறிகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் சந்தையில் கேள்வி – விற்பனை குறைவடைந்துள்ளதால் தேங்கிக்கிடக்கும் மரக்கறிகள் பழுதடைந்துவருகின்றன. இவ்வாறு பழுதடைந்த பிறகு குப்பை தொட்டிகளில் வீசப்படும் கழிவுகளை குதிரைகள் உண்ணும் நிலையையும் காணமுடிகின்றது.
மறுமுனையில் சந்தைகளில் மரக்கறியின் விலை வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here