இலங்கையின் சிறிய சுவிர்ஸ்லாந்து என அழைக்கப்படும் நுவரெலியாவின் நுழைவாயிலான ஹட்டன் நகரம் தற்போது குப்பை நகரமாக மாறிவருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.உலகின் புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் சுற்றுலா இடமாக கருதப்படும் சிவனொளிபாதமலை,சென்கிளையார்,டெவோன்,நுவரெலியா,எல்ல,உள்ளிட்ட பிரதான சுற்றுலா பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் ஹட்டன் ஊடாகவே அதிகமானவர்கள் வருகை தருகின்றனர்.
ஹட்டன் நகரில் பார்த்த இடங்கள் எல்லாம் குப்பை கூலங்களாக காணப்படுவதனால் சுற்றலா பிரயாணிகளும்,பொது மக்களும் மிகவும் அறுவறுப்பாகவே செல்கின்றனர்.இதனால் இங்கு வாழும் மக்கள் பற்றியும் பிரதேசம் பற்றியும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரதேசம் பற்றிய நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுவது தவர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகள் முதல் அரசியல் வாதிகள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக பலரும் குற்றம் சுமத்து கின்றனர்.
ஹட்டன் நகரில் பல ஆண்டுகள் காலமாக குப்பை அகற்றுவதற்கு என்று ஒரு சரியான இடத்தினை பெற்றுக்கொடுக்கவில்லை குடாகம பகுதியில் இருந்த இடம் பொருத்தமான இடமாகாததனால் அதற்கு நீதி மன்றம் தடை விதித்தது தடை விதித்தும் இற்றைக்கு பல ஆண்டுகள் ஆகின்றன.ஆனால் இது வரையும் உரிய இடத்தினை பெற்றுக்கொடுக்க அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தவறியதன் காரணமாக இன்று ஹட்டன் நகரம் குப்பை நகரமாக மாறி வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்;.
இந்நிலையில் ஹட்டன் நகரம்,மல்லியைப்பூ சந்தி ஆரியகம,ஹைலன்ஸ் பிரதான,இந்து மா சபை வீதி,பண்டாரநாயக்க டவுன்,வில்பர்ட்புறம்,காமினிபுற என எல்லா பிரதேசங்களிலும் குப்பைகுழிகள் நிறை வழிகின்றன.
மல்லியைப்பூ பகுதியில் பிரதான வீதியில் உள்ள பாலத்திற்கு அருகாமையில் குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பதாதை காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் ஹட்டன் நகர சபையின் ஊழியர்களே குப்பை கொட்டுவதாகவும் அதில் முக்கால் வாசி குப்பைகள் மகாவலி ஆற்றில் கலப்பதாகவும் இது குறித்து எந்த ஒரு சுகாதார அதிகாரியும் கண்டு கொள்வதில்லை என்றும் பொது பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த குப்பைகுழிக்கு சுமார் 100 மீற்றர் தூரத்தில் ஆரியகம,மற்றும் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கர்பினித்தாய்மார்கள் குழந்தைகளுக்கான பிரதான கிளினிக் சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பிரதான பாதையில் பாறிய அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளன. இந்த வீதியினை நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர்,நாய்கள் காகங்கள் உள்ளிட்ட மிருகங்கள் குப்பை இழுத்து சென்று வீதியில் போடுவதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன,அத்தோடு இரவு வேளையில் பன்றி உள்ளிட்ட கொடிய மிருகங்கள் குப்பையினை தேடி வருவதானால் இரவு வேளையில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.சுழலை சுத்தமாக வைத்திருக்காத மக்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கும் போது பொது சுகாதார பிரிவினரால் ஹட்டன் நகர சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்,இது குறித்து சமூகத்தில் அக்கறை கொண்ட வழக்கறிஞர்களாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில் அதிகாரிகளை மாத்திரம் குறை கூறுவதில் நியாயமில்லை காரணம் பொது மக்களும் உணர வேண்டும் இது எமது பிரதேசம் இதனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது என்ற உணர்வு இல்லாது இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமே,பொது மக்கள் தங்களுடைய வசதிக்காக கண்ட இடங்களில் குப்பை இடுவதனால் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் பல இடங்களில் ஹட்டன் நகர சபையினால் குப்பை தொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த குப்பை தொட்டில்களை பதில் செயலாளராக கடமையாற்றிய ஒருவர் உடைத்து அகற்றியதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அந்த குப்பை தொட்டில்கள் அமைப்பதற்கு ஹட்டன் நகர சபை செலவிட்ட பொது மக்கள் பணத்தினை யாரிடம் அறவிடுவது என்றும் இன்னும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
எது எவ்வாறான போதிலும் ஹட்டன் நகரில் குப்பை காரணமாக பாடசாலை மாணவர்கள்,பொது மக்கள் அதிகாரிகள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இந்த பிரச்சினையினை தீர்க்க கூடிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரிதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டிய மக்களின் பிரதான பொறுப்பு என்பதும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் தங்களுடைய பிரச்சினையினை தாங்களே தீர்த்தும் கொள்ளும் வகையில் குப்பை முகாமைத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அவ்வாறு முடியாதவர்கள் பிரதேச ரீதியாக ஒன்றிணைந்து இதற்கு தீர்வு பெற்று கொள்வது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.
மலைவாஞ்ஞன்