குருபெயர்ச்சியினால் நன்மை பெறும் ராசிகளும் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளும் !!

0
201

நிகழும் மங்களகராமன ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம்: 13.11.2021) அன்றைய தினம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு – மாலை மணி 6.21க்கு ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.

குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்மை பெறும் ராசிகள்: மிதுனம், சிம்மம், துலாம் ஆகியவையாகும்.

நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்து பலன் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம்

பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள்: கடகம், கன்னி, தனுசு, மீனம்.

கடகம் ராசிக்கான பரிகாரம் – துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த பலன்கள் வந்து சேரும்.

கன்னி ராசிக்கான பரிகாரம் – வாராகி தேவியை சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

தனுசு ராசிக்கான பரிகாரம்: – சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் கஷ்டங்களை போக்கி மன நிம்மதி ஏற்படும்.

மீனம் ராசிக்கான பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நல்ல பலன்களை பெற்றுத்தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here