குறும்புத்தனம் செய்த குழந்தையை வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொலை செய்த பாட்டி

0
135

கோவையில் குறும்புத்தனம் செய்த குழந்தையை பாட்டி வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொலை செய்துள்ளார்.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் நித்யானந்தம் மற்றும் நந்தினி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ள நிலையில் ஒரு வயது இளையமகனோடு தன் தாயார் நாகலட்சுமி வீட்டில் வசித்து வந்துள்ளார் நந்தினி. அவர் தினமும் வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தையை நாகலட்சுமியின் பொறுப்பில் விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தையின் குறும்புத்தனத்தை தாங்க முடியாமல் நாகலட்சுமி அவரைத் தாக்கியும், வாயில் பிஸ்கட் கவரை வைத்து திணித்தும் தூங்க வைக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து நந்தினி மாலை வீடு வந்த போது குழந்தை பேச்சு மூச்சற்று கிடந்துள்ளது. மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதில் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனை செய்தலில் குழந்தையின் வாயில் பிஸ்கட் கவர் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் உடலில் சிறு சிறு காயங்களும் காணப்பட்டுள்ளன. இதன் பின்னர் நாகலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here