குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

0
76

எரிபொருள் விலை குறைப்பு போதுமானதாக இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நடைமுறையாகும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது.

அதாவது ஒக்டைன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஒக்டைன் 92 ரக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. இதனால் மக்களிடையே இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறைக்கப்படும் கட்டணங்களின் பயன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, தற்போது குறைக்கப்படாத கட்டணம் கனியவள கூட்டுதாபனத்தின் தலைவருக்குச் செல்கிறதா என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் தொழிற்துறை சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் எரிபொருள் கட்டணத்துக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அதனை குறைக்க முடியும் எனவும் கூறிய தரப்பினர் தற்போது எரிபொருள் விலையை குறைக்காமல் உள்ளது.

அத்துடன் தற்போதைய எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here