புஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொச்சைல்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி தோட்டத்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தொழிலாளி குறித்த தோட்டத்தில் வேலையை முடித்து வீடு திரும்புகையில் தேயிலை மலையில் இருந்த குளவிக்கூடு திடிரென கலைந்து இருவரை தாக்கியுள்ளது.தாக்கப்பட்ட இருவரும் வகுகப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 53 வயதுடைய எஸ். ராஜேந்திரன் உயிரழந்துள்ளதோடு மற்றொரு தொழிலாளி கம்பளை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்