பொகவந்தலாவ எல்பட கீழ் தோட்ட தொழிலாளர்கள்10பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி
நோர்வூட் பொலிஸ்பரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 10பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இந்த சம்பவம் 28.02.2018.காலை 10மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 08பெண் தொழிலாளர்களும் 02 ஆண் தொழிலாளர்களும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்
எல்பட 15ஏக்கர் மலையில் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்