குளவி தாக்குதலில் 10 பேர் பாதிப்பு – லிந்துலை மருத்துவமனையில் அனுமதி!!

0
124

வெவ்வேறு இடங்களில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லிந்துலை பெயார்வெல், அகரகந்தை, தங்ககலை ஆகிய தோட்டங்களில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் 05.03.2018 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

DSC03061 DSC03062 DSC03044

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 2 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here