மலையகத்தில் இடம்பெறும் குளவி தாக்குதலுக்கு முற்றுபுள்ளி வையுங்கள் இல்லையென்றால் பல உயிர்களை காவு கொண்டு விடும் என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் அனேகமாக குளவிதாக்குதல் இடம்பெறுவதோடு அவ்வப்போது சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.இதற்கு முழுமையான காரணம் பொறுப்பற்ற தோட்ட நிர்வாகங்களே.ஆரம்ப காலங்களில் தோட்ட நிர்வாகங்கள் அதிகாலை குளவி கூடுகளை அப்புறப்படுத்திய பின்னரே தொழிலாளர்களை பணிக்கு அனுப்புவர் ஆனால் அந்த முறை தற்போது மாறியுள்ளது.
அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலாய் தோட்ட கம்பனிகளிடமும் நிர்வாகத்திடமும் இவ்விடயம் தொடர்பில் முழுமையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.குளவி கூடுகளை அப்புறப்படுத்தி தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் தளத்தில் முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்.




