பிரான்ஸ் நாட்டில் குளியலறையில் தொலைபேசி உபயோகித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸில் மார்சேயின் எனும் நகரப்பகுதியில் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் குளியலறைத் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் வேளை அருகில் மின்னேறிக் கொண்டிருந்த தொலைபேசியை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதால் குறித்த சிறுவன் சுய நினைவிழந்து கீழே விழுந்துள்ளார். அதையடுத்து, விரைந்து செயற்பட்ட சிறுவனின் தயார் மருத்துவக் குழுவினரை அழைத்துள்ளார். அங்கு விரைந்து வந்த அந்த குழுவினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும், அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.