குழந்தைகளுக்கு நித்திரை பிரச்சினை-ஆய்வில் வெளியான தகவல்…

0
80

இலங்கையில் குழந்தைகளுக்கு நித்திரை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளைகளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும் என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இலங்கைச் சிறுவர்கள் மத்தியில் தூக்கம் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், கிடைக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளின்படி, 25% குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சினைகள் உள்ளன.

இதேவேளை, ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்க வேண்டும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக நிபுணர் டொக்டர் இனோகா விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.

“பிறந்தது முதல் ஒரு குழந்தை மூன்று மாதங்களுக்கு சுமார் 14-17 மணி நேரம் உறங்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் உள்ளன.

4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை 12 முதல் 16 மணி நேரம், ஒரு வருடம் முதல் 2 வயது வரை 11 முதல் 14 மணி நேரம், 3 முதல் 4 வயது வரை 10 முதல் 13 மணி நேரம், 5 வயது குழந்தைக்கு 10 முதல் 12 மணி நேரம் உறக்கம் வேண்டும்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 50% க்கும் அதிகமான நித்திரை தேவை. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

இதேவேளை, வயது வந்தவர் குறைந்தது 7 மணிநேரம் தூங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here