குழந்தையொருவரை நபர் ஒருவர் தாக்கும் காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் குழந்தையை தாக்கும் நபர் மது பாவனைக்கு அடிமையானவர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.