குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 65 வயது நபருக்கு கடுங்காவல் சிறை!

0
12

குழந்தையை (1 வயது 8 மாத) பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த அக்மீமனாவைச் சேர்ந்த 65 வயதுடைய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து காலி உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.

முதல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டாவது குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

விசாரணையின் போது, ​​2018 ஆம் ஆண்டில், சந்தேக நபர் அருகி இருந்த வீட்டிலிருந்த குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது.

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, குற்றவாளிக்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here