நுவரெலியா மாநகர சபையினரால் விநியோகிக்கப்படும் குழாய் குடிநீர் அருந்துவதற்கு ஏற்றதாக இல்லையென வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. நுவரெலியா மாநகர சபையால் விநியோகிக்கப்படும் குழாய் குடிநீரை பரிசோதனை நடாத்தியதில் அருந்துவதற்கு ஏற்றதாக உள்ளதாக பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றன.
குழாய் குடிநீர் சம்பந்தமாக எவரும் பீதியடையத் தேவையில்லை. என நுவரெலியா மாநகர முதல்வர் சந்தன லால் கருணாரட்ன நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபொழுது கூறினார்.
அங்கு மாநகர முதல்வர் சந்தன லால் கருணாரட்ன தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது ஏப்ரல்
வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த வசந்த காலத்தை கழிப்பதற்காக பெருந்திரளான உள்நாட்டுரூபவ் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவார்கள். இவர்களின் அடிப்படைத் தேவைகளை கவணிக்கவேண்டிய பொறுப்பு மாநகர சபைக்கு இருக்கின்றது.
நான் இம்முறை மாநகர முதல்வராக தெரிவு செய்வதற்கு முன் மாநகர சபையால் விநியோகிக்கப்படும் குழாய் குடிநீர் அசுத்தமடைந்து குடிப்பதற்கு இந்த நீர் ஏற்றதல்ல என பல ஊடகங்களில் செய்திகள் வந்தன.
ஆனாலும் நான் இம்முறை மாநகர முதல்வராக பொறுப்பேற்று 20 நாட்கள் ஆகின்றன. நுவரெலியா வாழ் மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. கடந்த காலங்களில் குடிநீர் சம்பந்தமாக பல பிரச்சனைகள் இருந்தன. இல்லை என்று கூறமுடியாது. குடிநீர் சேமிக்கும் நிலையங்களுக்கு நீரை சுத்தப்படுத்தும் குளோரின குறைவாகவே பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. நான் கடந்தமாதம் 22ம் திகதி மாநகர முதல்வராக பொறுப்பேற்றப்
பின் மாநகர ஆணையாளர் மாநகர சுகாதார வைத்திய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட நீர் சேகரிக்கும் நிலையங்களுக்கு தேவைப்பட்ட அளவு குளோரின் பெற்றுக்கொடுத்தேன்.
அதன் மூலம் நீரை சுத்தம் செய்துள்ளேன். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து நிலத்திற்கு அடியிலிருந்து பெறப்படும் குடிநீர் 87%% குடிப்பதற்கு ஏற்றதாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. குடிநீர் உற்பத்தியாகும் இடங்களில் குடிநீர் அசுத்தமடைய
சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனாலும் அதற்கு தேவையான 39குளோரின் உபயோகித்து நீரை சுத்தம்
செய்யலாம்.
எனவே நுவரெலியாவில் தற்போது நடைபெறும் வசந்த காலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின்
அடிப்படை தேவைகளை கவனிப்பதற்கு நுவரெலியா மாநகர சபையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவமும்
பொலிஸாரும் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நுவரெலியாவிற்கு வருகை தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
சந்ரு