குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ புகை எழும்புவதைக் காண முடிவதாக ஏ.எஃப்.பி (AFP) மற்றும் ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நோய் காவு வண்டிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு, மக்கள் வருவதைத் தவிர்க்குமாறும், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலில், “தூதரகத்திற்கு வர வேண்டாம். உங்கள் இருப்பிடத்திலேயே பாதுகாப்பாக இருங்கள்; ஜன்னல்களுக்கு அப்பால், கட்டிடத்தின் மிகக் கீழ் தளத்தில் தஞ்சம் அடையுங்கள். வெளியே எங்கும் செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் “இருக்கும் இடத்திலேயே தஞ்சம் அடையுமாறும் (Shelter in place), ஏதேனும் தாக்குதல்கள் நிகழும் பட்சத்தில் அதற்கான பாதுகாப்புத் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறும், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதல் தாக்குதல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும்” வலியுறுத்தப்பட்டுள்ளது.




