கூட்டணியை விமர்சிப்பதற்கு இதொகாவுக்கும் அதன் இளைஞரணிக்கும் எந்த அறுகதையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவனேசன் தெரிவித்துள்ளார்.
இதொகாவின் இளைஞரணி விடுத்திருக்கும் அறிக்கைக்கு பதில் விடுக்கும் வகையிலே விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது>
மலையகத்தில் அரசியல் செய்ய இ.தொ.காவை தவிர எவருக்கும் அறுகதையில்லைஎன அதன் இளைஞரணி விமர்சித்துள்ளது. எம்மை விமர்சிக்க இதொகாவிற்குத்தான் அருகதையில்லை.
காலம் காலமாக மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தியது இதொகாதான். தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சிபீடமேறி குறுகிய காலத்திற்குள் அவர்கள் கனவில்கூட நினைக்காதவற்றை இன்று நனவாக்கியிருக்கின்றது. மலையக மக்களை நிலவுடமையாளர்களாக்கி அவர்களை தத்தமது தனி வீடுகளில் வாழ வழி செய்துள்ளது. இவர்கள் கூட்டணியினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்லபல வேலைத்திட்டங்களை தாங்களே கொண்டு வந்ததாக தான் பெறாத பிள்ளைக்கு பெயர் சூட்டி சொந்தம் கொண்டாடுகின்றனர். இவர்கள் முறையன விதத்தில் மக்கள் பணி செய்திருந்தால் மக்கள் அவர்களை நிராகரித்திருக்க மாட்டார்கள்.
வடகிழக்கில் வழங்கப்பட்ட 46000 இந்திய வீடமைப்பு திட்டங்கள் நிறைவடைந்து பயனாளிகளுக்கு கையளித்து பல காலமாகிய நிலையிலும் மலையகத்தில் 4000 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் தாமதமாகியமைக்கு இதொகாவே காரணம். மலையகம் பற்றியும் அரசியல் பற்றியும் வாய்கிழிய பேசுகின்ற இதொகா அவர்களின் அரசியல் சுயலாபத்திற்கான இந்திய வீடமைப்பு திட்டத்தை நுவரெலியா பதுளை ஆகிய மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தினர்.
ஆனால் நாம் இப்பொழுது மலையக மக்கள் வாழ்கின்ற 11 மாவட்டங்களில் வீடமைப்பு திட்டங்களையும்> உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தொழிற்சங்க அங்கத்தவர் அதிகரிப்பிற்கும் வாக்கு சேகரிப்பிற்கும் அற்ப அரசியல் செய்யும் குரூர மனப்பான்மை எங்கள் தலைமைகளிடம் இல்லை. தாங்களின் தானைத்தலைவர் உருவாக்கியதாக மார்தட்டி கொள்ளும் பிரஜாசக்தி போன்றவைகளும் கடந்த காலங்களில் கட்சி காரியாலயமாக செயற்பட்டதையும் இந்தியாவிலிருந்து வரவழைத்த அம்மாணிக்கு அரசாங்க பணத்தை வாரி வழங்கி சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததையும் மக்கள் அறியாமலில்லை.
30 வருட காலமாக அமைச்சு பதவிகளை வகித்த இதொகாவினால் மலையக மக்களுக்கென ஒரு அதிகார சபையினை உருவாக்கும் தெம்பிருக்கவில்லை. இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை எனும் அதிகார சபையினை உருவாக்க அமைச்சரவை அனுமதியளித்து அதற்கான கட்டமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றனர். இவ்வருட இறுதிக்குள் இந்த அதிகாரசபையினூடாக பல மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும்.
ஆசிரிய உதவியாளர்களின் சம்பள உயர்வு குறித்த கலந்துரையாடலின்போது வாளாதிருந்தவர்கள் இன்று ஆசிரிய உதவியாளர்கள் குறித்து கரிசனை காட்டுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஆசிரிய உதவியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவு> கூட்டணியின் பிரதி தலைவர் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களாலேயே பெற்றுக் கொடுக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியவர்கள். இந்தியாவில் போய் காளை மேய்க்க வேண்டியவர்கள் அல்லர். யாராக இருப்பினும் மக்கள் பணி செய்தே ஆகவேண்டும். வேுலைசெய்வதாய் படம் காட்டிவிட்டு பீத்தி கொள்வதில் பயனில்லை. மக்கள் தெளிவுடனே இருக்கின்றனர்.
கடந்த காலங்களை விடவும் தற்பொழுது மலையகத்தில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி> அரசியல் சார்ந்த செயல் திட்டங்களை மக்கள் வரவேற்கின்றனர். கூத்துகாரர்களின் பேச்சுக்கு சோரம் போகாமல் கூட்டணியின் உண்மையான வேலைத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுண்டு எனவும் தெரிவித்துள்ளார்.