கூட்டு உடன்படிக்கையில் நிலையான வேதன அதிகரிப்பு குறித்து அவதானம் செலுத்தபடவேண்டும்- எஸ்.அருள்சாமி தெரிவிப்பு

0
186

பெறுந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி காலவாதியாக உள்ள நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட பேச்சிவார்த்தை ஒரு சரியான முடிவை எட்டவில்லை அந்த அடிப்படையில் புதிய கூட்டு ஒப்பந்த உடன்படிக்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கபடும் வேதனமானது நிலையான வேதனம் கிடைக்கபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் கூட்டு ஒப்பந்த பேச்சிவார்ததையில் கலந்து கொள்ளும் உறுப்பினருமான எஸ்.அருள்சாமி தெரிவித்துள்ளார்

புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் எஸ். அருள்சாமி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த கூட்டு உடன்படிக்கையின் படி தோட்டதொழிலாளர்களுக்கு அதிகரிக்கபட்ட வேதனமானது தோட்ட நிர்வாகங்களால் உரிய முறையில் வழங்கபடவில்லை நிச்சயிக்கபட்ட நாளாந்த சம்பளத்துக்கு குறைவான தொகையே வழங்கபட்டு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

இந்நிலையில் அந்த நிலமையை மாற்றி இந்த முறை தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கபட்ட தொகை கிடைக்க பெறுவது உறுதிசெய்யபடுமெனவும் அதற்கான தகவல்களை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் திரட்டிவருகிறது. எனவே இலங்கை தொழிலாளர் காங்ரசும் அதன் கூட்டு பங்காளி கட்சிகளும் தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்றவாறு அவர்களுடைய அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி நிற்பதோடு தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான ஒரு சம்பளத்தை இம் முறைவழங்கமுடியுமென கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ள தொழிற்சங்கங்கள் உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here