இலங்கை இன்று தொழிலாளர்கள் மிகவும் கஸ்ட்டமாக முகம் கொடுத்திருக்கின்ற ஒரு சூழலில் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வாழ்வதற்கே பெரும் சவாலாக உள்ளனர். இந்நிலையில் கம்பனிகளும் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கப்படுகின்றன இதற்கு கூட்டு ஒப்பந்தம் இல்லாமையும் ஒரு காரணம் எனவே கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திட அரசாங்கம் கம்பனிகளுக்கு அலுத்தம் கொடுக்க வேண்டும். என இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.
ஹட்டன் செங்கொடி சங்க அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் வழமையாகவே அடக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சூழலிலேயே வாழ்கின்றனர்.கொரோனாவுக்கு அப்பால் இவர்கள் மேலும் பாதிப்புக்கு கம்பனிகள் உள்ளாக்கி வருகின்றனர். கம்பனிகள் தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதனை கைவிட்டுவிட்டு தொழிலாளர்களை நெருக்கடிக்கு தள்ளிவிட்டு அவர்கள் அதன் மூலம் லாபம் ஈட்டலாம் என கருதுகின்றனர்.
இது கம்பனிகளுக்கு நிரந்தரமானதாக ஒரு போதும் அமையாது இந்த அடக்கு முறைக்கு எதிராகவும்,தொழிலில் அவர்களுக்கு வெறுப்பு தன்மை ஏற்படும் போது அவர்கள் பாரிய நட்டத்தினை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் அதே அரசாங்கம் தலையிட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள நிர்னைய சபையினுடாக 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது இது வரவேற்கப்பட வேண்டிய விடயம் ஆனால் அவ்வாறு பெற்றுக்கொடுக்கப்பட்ட 1000 சம்பளத்தினை காரணம் காட்டி கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பது தொழிலாளர் சட்டத்திற்கு முரணானது.
ஏனென்றால் தொழிலாளர்களை பாதுகாக்கும் கூட்டு ஒப்பந்தம் நேற்று இன்று தொடங்கியது அல்ல இது பல வருட காலமாக வழமையில் இருந்து வரும் ஒரு சட்டமாக இது கருதப்படுகிறது.இதனை உடனடியாக நிறுத்துவது என்பது தொழிலாளர் சட்டங்கள் அனைத்தினையும் வன்முறைக்கு உட்படுத்துவதற்கு சமனானது எனபது தான் பொருள்படும்.
எனவே இந்த தொழிலாளர்கள் ஏற்கனவே கிடைத்த 750 ரூபா சம்பளத்தினை கூட பெற முடியாத நிலையிலேயே உள்ளனர்.அது மட்டுமல்லாது அவர்களது வேலை நேரம் வேலை நாட்கள் தொழில் பாதுகாப்பு பெண்களுக்கு குறிப்பாக பிரசுவ சகாய நிதி போன்ற பல்வேறு பிரச்சினைகளும் இன்று கேள்வி குறியாக மாறிவிட்டன.
இவர்களுக்கு இன்று குழப்பமாக இருப்பது மற்றுமொரு காரணம் இவர்களுக்காக இருக்கின்ற தொழிற்சங்களுக்கு சந்தபணம் அறவிடுவதனையும் கம்பனிகள் நிறுத்தியுள்ளன இது தொழிசங்க முறியடிப்பாகும். ஆகவே எல்லாப்பக்கத்திலும் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு சவாலாக இருக்கின்ற காலகட்டத்தில் சில வேலை கம்பனிகள் நினைத்துக்கொண்டிருக்கலாம் தொழிலாளர்களுக்கு இவ்வாறு தொடர்ந்து பிரச்சினைகளை கொடுப்பதன் மூலம் லாபம் பெறலாம் என கம்பனிகள் நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் தொழிலாளர்கள் அதிருப்த்தி அடைந்தால் அது உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் கம்பனிகளுக்கு தொழில் வழங்குனர்களுக்கு நீண்ட காலத்தில் நட்ட ஏற்பட போகின்றது என்பதனை எங்களால் எதிர்வு கூற முடியும்.
இதில் கவலைககுரிய விடயம் என்வென்றால் சம்பளத்தினை அதிகரிக்;க வில்லை என்ற உடன் அரசாங்கம் தலையிட்டு ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுத்தது ஆனால் தொழிலாளர்கள் இவ்வாறு அடக்கி ஒடுக்கி தொழிலாளர்களின் சட்டங்கள் வன்முறைக்கு உட்படுத்தி வரும் நிலையிலும் அரசாங்கம் ஏன் கம்பனிகளுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அலுத்தம் கொடுக்காதிருப்பது என ஒரு புரியாத புதிராகவே உள்ளது..
எனவே இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் இரண்டு விடயங்களை வலியுறுத்துகிறது அரசாங்கம் உடனடியாக கம்பனிகளுக்கு கூட்டு ஒப்பந்த்தத்தில் கையொப்பமிட அலுத்தம் கொடுக்க வேண்டும் அதே கூட்டு ஒப்பந்தத்தில் புதிய விடயங்களை சேர்த்து கூட்டுப்பந்தத்தினை கையொப்பமிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்