கூட்டு ஒப்பந்த தொழிற்சங்களுக்கு முடியாவிட்டால் அரசுடன் நாம் பேச்சுக்களை மேற்கொள்வோம்; பொகவந்தலாவையில் மனோ!

0
167

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரக இருப்பதாக தேசிய ஒருமைபாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகனேசன் தெரிவித்தார்.

14.10.2018 அன்று ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ சென்.மேரீஸ் மத்திய கல்லூரியில் அமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச சபையின் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான பா.சிவனேசன் மற்றும் பழனிவேல் கல்யானகுமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி. சுமனசேகர மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார். தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பேச்சிவார்த்தை தொடர்பில் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்துவோம். பேச்சுவார்த்தையில் அரசாங்கம் இணக்கபாட்டுக்கு வாராவிட்டால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக கூறுகிறார்.

அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்துவதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தாங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்த நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் தான் அரசாங்கம் என தெரிவித்தார்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தற்போதய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் அவர்களுக்கும் இடையில் பேச்சுவார்ததை இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. யார் யாரோடு வேண்டுமானாலும் பேசலாம் அது ஒரு பிரச்சினை அல்ல நானும் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து பேசினேன் அதாவது மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதா புதிய முறையில் நடத்துவதா தொடர்பில் கலந்துரையாடினேன்.

கடந்த காலங்களில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று கொண்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகனுடன் கலந்துறையாடினேன். அது சட்டவிரோதம் அல்ல ஏன் என்றால் நானும் கலந்துரையாடல் அமைச்சர் அதேபோன்று நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாரோடு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காபந்து என்ற அரசாங்கம் வாராது காபந்து என்றால் ஆபத்து என்று அர்த்தம்.

ஆபத்து வரும் என்று மஹிந்த ராஜபக்ஸவோ மைத்திபால சிறிசேன அவர்ளோ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களோ சொல்லவில்லை. மனோகனேசன் சொல்லவில்லை. இதனை சொல்வது எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் யார் பாராளுமன்றத்திற்கு பின்புற கதவு வழியாக தலையில் முக்காடு போட்டு கொண்டு வந்தவர்கள்.

எஸ்.பி.திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்காரர் கடந்த உள்ளுராட்சி தேர்தல் காலபகுதியிலே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களை தலவாகலையில் வைத்து பொய்யான விமர்சனங்களை செய்து வந்தார். அதுமட்டும் அல்ல யானை ஊழியர் சேமலாப நிதியினை விளுங்கிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இன்று பொகவந்தலாவையிலே இடம்பெறுகின்ற நடமாடும் சேவையில் ஊழியர் சேமலாப தினைக்களம் இருக்கிறது. அங்கு சென்று மக்களுடைய இலக்கத்தை கூறி மக்களின் ஊழியர் சேமலாப பணத்திலே எவ்வளவு நிலுவை தொகை இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும் இதேவேளை மாகாணசபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாத காலபகுதியில் பலமுறையில் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

எஸ் .சதீஸ் – க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here