கந்தபளை பாக்தோட்டபகுதியில் இரண்டு வருடகாலமாக மூன்று சிறுமியர்களுக்கு கூட்டு பாலியல் தொல்லை விடுத்து வந்த மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நிதவான் உத்தரவீட்டுள்ளார் .
குறித்த சந்தேக நபர்கள் மூன்று பேரும் 02.05.2018 ம் திகதி கந்தபளை பொலிஸாரினால் கைது செய்யபட்டு நுவரெலியா மாவட்ட நிதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட போதே இவர்கள் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டது.
நுவரெலியா கந்தப்பளை பாக்தோட்டபகுதியில் மூன்று சிறுமிகளை இரண்டு வருடகாலமாக பாலியல் தொல்லை விடுத்து வந்த போதிலும் குறித்த மூன்று சிறுமிகளும் கொழும்பு பகுதிக்கு தப்பி சென்றுள்ள வேலையில் குறித்த சிறுமியர்களை தேடி குறித்த சந்தேக நபர்கள் குழுவினர் கொழும்பு பகுதிக்கு தேடி சென்ற வேலை குறித்த சந்தேக நபர்கள் மூன்று பேரும் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யபட்டு கந்தப்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .
இவ்வாறு பாதிக்கபட்ட சிறுமிகள் 13,14,16 வயதுடைய சிறுமிகள் எனவும் குறித்த மூன்று சிறுமிகளும் சட்டவைத்திய அதிகாரியின் மறுத்துவ பரீசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கந்தபளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதிஸ், டி.சந்ரு