கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் காசல் ரீ நீர்தேக்கத்திற்கும் லெச்சுமிதோட்ட மின்சார நிலையத்திற்கும் பாதிப்பு- மக்கள் விசனம்

0
121

காசல் ரீ நீர்தேக்கத்திற்க்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இனந்தெரியாதவர்களினால் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதாக பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கெசல்கமுவா ஓயாவில் காணப்படுகின்ற பாரிய கற்பாறைகளை உடைத்து கற்பாறைக்குள் சுரங்க குழிகளை தோன்றியே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம் பெறுவதாக தெரிவிக்கபடுகிறது

இந்த மாணிக்கல் அகழ்வினால் பொகவந்தலாவ லெச்சுமி தோட்டபகுதியில் உள்ள உப
மின்சார நிலையத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடிய நிலை காணபடுவதாகவும் காசல் ரீ
நீர்தேக்கத்தில் மண் குவிந்து காணபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதேவேலை குறித்த பகுதியில் லெச்சுமி தோட்டபகுதியில் அமைக்கபட்டுள்ள மின்சார நிலையத்திற்கு நீர் அளவினை குறைக்கும் நிலையமும் எதிர்காலத்தில் பாதிக்ககூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கெசல்கமுவ ஓயாவின் நீர் மாசடைந்து காணபடுவதாகவும் மக்கள் மேலும் தெரிவித்தனர்.

DSC07513 DSC07537 DSC07535 DSC07532 DSC07516

இதேவேலை மலையகத்தில் தொடரும் பனி மற்றும் அதிக வரட்சியான காலநிலைகாணப்படுவதால் காசல் ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் கெசல்கமுவ ஓயாவின் நீர் மட்டமும் குறைவடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது

எனவே இந்த கெசல் கமுவ ஓயாவில் இது போன்ற சட்டவிரோதமான மாணிக்கல் அகழ்வு நீண்டகாலமாக இடம் பெற்று வருவதாகவும் இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் கவனம் செலுத்தி இது போன்ற சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவோர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளபட வேண்டும் எனவும் பிரதேச மகக்ள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here