கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பேருந்தில் பயணித்துள்ள 42 பேர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில்சாலைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.