கேகாலை மாவட்டம் தெரணியகல – நூரி தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் அச்சுறுத்தல் காரணமாக அச்சத்தில் இருந்த மக்களை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் நூரி தோட்ட ஆலயத்திற்கும் பௌத்த விகாரைக்கும் அமைச்சர் சென்று ஆசி பெற்றார். அமைச்சர் பழனி திகாம்பரத்துடன் நீதித்துறை பிரதி அமைச்சர் சாரதி துஸ்மந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் பொல்கம்பல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.