கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மை.

0
133

மலையகத்தில் பிரதான நகரங்களில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 07 நாட்களுக்கு பிறகு இன்று 12.03.2022 லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு கேஸ் கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.

எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 100ற்கும் குறைவான சிலிண்டர்களே கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக கேஸ் விற்பனையாளர் கூறினார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here