அக்கப்பத்தினை வேவர்லி தோட்டத்தில் நல்லாட்சி காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட சுமார் 81 வீடுகள் மின்சாரம், தண்ணீர், பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன.
இதனால் இந்த வீடுகளுக்குச் செல்வதற்கு மக்கள் தயக்கம் காட்டியிருந்தனர்.
ஒரு சிலர் மாத்திரம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் குடியேறி தண்ணீரினை சேமித்து வைத்துக்கொண்டு தங்களது அன்றாட நடவடிக்கைககை மேற்கொண்டிருந்தனர்.எனினும் அதிகமானவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமாகக் குடியேறவில்லை.அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்pற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்து பல கோடி ரூபிகளைச் செலவு செய்து தண்ணீர், பாதை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சிவப்பிரகாசம் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.
இது குறித்து அரசாங்கத்திற்கும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் பாராட்டினையும் நன்றியினையும் பொது மக்கள் தெரிவித்தனர்.
இந்த அடிப்படை அபிவிருத்தி குறித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சிவப்பிரகாசம் சச்சிதானந்தன் கருத்து தெரிவிக்கையில்.
குறிப்பிட்ட இந்த வேவர்லி வீடமைப்பு திட்டமானது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்,இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பாதை,மின்சாரம்,குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் மக்கள் அந்த வீடுகளுக்குச் சென்று குடியேறவில்லை.இவ்வாறு நிறுத்தப்பட்ட வேலைகள் கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொணடமான் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் பயனாக 81 வீடுகளுக்கான இன்று பல கோடி ரூபாய் செலவில் பாதை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட விடங்கள் செய்து கொடுக்கப்பட்டு இன்னும் ஓரிரு கிழமைகளில் குறித்த வீடமைப்பு திட்டம் பயனாளிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டங்களை வைத்து பலர் அரசியல் நாடகம் செய்ய முனைந்தார்கள்,ஆனால் இதில் பாதிக்கப்பட்டது மக்களே, அரசியல் செய்ய வேண்டும் மக்களைப் பலிகடாவாக ஆக்கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு செய்யப்பட்ட கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,இந்த வேலைத்திட்டற்கு முன்னுரிமை கொடுத்து இந்த வேலைத்திட்டத்தினை நிறைவு செய்து வருகிறார். அதே போன்று இந்த அரசாங்கமானது மலையக மக்களின் வாழ்விலே பாரிய அளவில் நிதியினை ஒதுக்கீடு செய்து கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக செய்து வருகிறது.
அக்கப்பத்தினை பகுதியில் இன்னும் பல கோடி ரூபா செலவில் காபட்பாதைகள், கொங்கிறீட் பாதைகள்,உள்ளக பாதைகள் வீடமைப்பு திட்டங்கள் என பல அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. அவற்றை மிக விரைவில் பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படும்.
இந்த வேலைத்தி;திட்டங்களை இந்த பிரதேசத்தில் முன்னெடுத்தமைக்காக அரசாங்கத்திற்கு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் நன்றியினை தெரிவிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.