கொச்சை வார்த்தையால் ஏசிய தோட்டத்துரைக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டம்.

0
211

தோட்டத்துரையின் மனைவியின் உள்ளாடையை துவைக்க மறுத்த தோட்ட தொழிலாளியை கொச்சை வார்த்தையால் ஏசிய தோட்டத்துரைக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் செனன் மக்கள் பணி பகீஸ்கரிப்பு போராட்டம்.

ஹட்டன் பிளான்ட்டேஷன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செனன் தோட்ட தோட்டதொழிலாளர்கள் 02/04/2022 சனிக்கிழமை தோட்டத்துரைக்கு எதிராக பணிபகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இரண்டாவது நாளாகவும் (04/04/2022) திங்கட்கிழமை பணி பகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அதாவது தோட்ட பங்களாவில் காவல் வேலை செய்யும் தோட்ட தொழிலாளி ஒருவரை தோட்டதுரை தன் மனைவியின் உள்ளாடையை துவைக்க சொன்னதாகவும் அதை மறுத்ததினால் கொச்சை வார்த்தைகளால் திட்டியதாகவும் தொழிலாளி கூற அதனால் ஒட்டு மொத்த செனன் தோட்ட தொழிலாளர்களும் தோட்ட துரைக்கெதிரான பணி பகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டாவது நாளாகவும் தொடர் பணி பகீஸ்கரிப்பில் இறங்கியுள்ள செனன் தொழிற்சாலை பிரிவு தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக செனன்,கேம் தோட்ட தொழிலாளர்களென மூன்று பிரிவு மக்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இது தொடர்பில் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கையில் தோட்டதுரையும் அவரோடு தோட்டத்தில் வேலை செய்யும் இரு கணக்குபிள்ளையும் இடமாற்றம் செய்ய வேண்டும் காரணம் இம்மூவரும் தோட்டத்தொழிலாளர்களை அடிமை போல நடத்தி வருகின்றனர்.அனைவரையும் தகாத வார்த்தை கொண்டு ஏசுகின்றனர்.மேலும் இவ்விடயம் தொடர்பில் தோட்ட முகாமையாளரிடம் முறையிட்டுள்ளோம் அதுமட்டுமல்லாது அரசியல் தொழிற்சங்கங்களிடமும் கடிதங்களை அனுப்பியுள்ளோம்.இதற்கு நிரந்த தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் பணிபகீஸ்கரிப்பை முன்னெடுக்க நேரிடும் என குறிப்பிட்டனர்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here