அவுஸ்திரேலிய நாட்டில் குயின்ஸ்லாந்து பெண்ணொருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை கொன்றுள்ளார்.
குயின்ஸ்லாந்தை சேர்ந்த 69 வயதான ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்றுள்ளார்.கணவரை கொலை செய்த வழக்கில் ஜூடித் ஆன் வென் தற்போது சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.
எனினும், கடந்த மூன்று ஆண்டுகள் அவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்துள்ளதால், நீதிமன்றம் அவரை பரோலில் செல்ல அனுமதித்துள்ளது.
ஆன் வென் தமது கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்துள்ளார். இதனால் தூக்கமின்மை, தனிமைப்படுத்தப்பட்டு அவநம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார்.
மேலும், கணவரை கவனிக்க மறுத்துள்ளார். இதனால் 18 மாதங்களில் அவருக்கிருந்த உளவியல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.இந்தநிலையில் 20,000 டொலர் செலவிட்டு, படகு ஒன்றை லான்ஸ் வென் வாங்க, அது குடும்பத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்தே, தமது கணவர் பயன்படுத்திவந்த மாத்திரைகளில் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்துள்ளார்.இதில் சுருண்டு விழுந்த லான்ஸ் வென்- ன் கை நரம்பையும் ஜூடித் ஆன் வெட்டி விட, இறுதியில் உடற்கூறு ஆய்வில், மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதே மரண காரணம் என உறுதி செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர் விசாரணைக் கைதியாக 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், உடனடியாக பரோலில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.