கொட்டகலையில் சிசிடிவி கமெராவை உடைத்துவிட்டு கடையில் திருட்டு!

0
137

கொட்டகலை ரொசிட்டா பிரதான நகரத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொள்ளை சம்பவம் 20.06.2018 அன்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சீ.சீ.டீ.வீ கெமராவின் பதிவு உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, குறித்த பலசரக்கு கடையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர் நுதனமான முறையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவை இயக்கவிடாமலும், உடைத்தெறிந்தும் விட்டு கடைக்குள் நுழைந்து மிகவும் சூட்சமான முறையில் கடையில் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்த கடை உரிமையாளரின் முறைபாட்டை ஏற்று ஸ்தலத்திற்கு விரைந்த திம்புள்ள பத்தனை மற்றும் நுவரெலியா விசேட பொலிஸின் கைரேகை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here