கொட்டகலையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட மற்றும் கொட்டக்கலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதனுக்கு இடையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கொட்டக்கலை நகரில் வெளிமாவட்டங்களை சேர்ந்த சிலர் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுவதாகவும் அதற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.மேலும் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தோட்ட நிர்வாகங்கள் அவ்வப்போது தரமற்ற பொருட்களை தோட்டத்தொழிலாளிகளுக்கு வழங்குவதாக கூறப்படும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின் பின்னர் அதற்கான முழுமையான தீர்வீனை விரைவாக எடுப்பதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தெரிவித்தார்.
நீலமேகம் பிரசாந்த்