திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் லொறியுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் 20.06.2018 அன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் அட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் அட்டனிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சாணம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதலுக்குள்ளாகி இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒன்றின் பின் ஒன்றாக விரைந்து ஓர் திசையில் சென்ற இவ்விரு லொறிகளில் சாணி உரம் ஏற்றிச் சென்ற லொறி கற்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் பின் பகுதியில் மோதுண்ட நிலையில் சாணம் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)