கொட்டகலை அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் பால்குட பவனி மிக சிறப்பாக நடைபெற்றது.

0
216

பிலவ வருடம் சித்திரை மாதம் 11ம் நாள் 24 ம் திகதி காலை 8.05 மணி முதல் 12.30 மணிவரை வரும் துவாதசி சுக்லபக்ஷ வளர்பிறை திதியும். உத்தர நட்சத்திரமும் சித்தமிர்த யோகமும் ரிசப லக்னம் கூடிய சுபநாளில் கொட்டகலை ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் பூஜை வழிபடுகள் ஆரம்பமாகின.

அதனை தொடர்ந்து விநாயகர் வழிபாடு அனுஞ்ஞை வாஸ்த்து சாந்தி, மகா கணபதி ஹோமம் பால்குட பவனி, ஆகியன நடைபெற்றன. ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மனுக்கு நவோஸத்ர சகஸ்ரநாம 1008 மஹா சங்காபிசேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜையுடன் பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

இதன் போது உலகம் மற்றும் நாட்டு மக்கள் பீடிக்கப்பட்டுள்ள கொரோனாதொற்றிலிருந்து விடுபட விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றன.
சமய கிரியைகள் கிரியா கலாபமணி சிவஸ்ரீ ச.கந்தராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்பூஜை வழிபாடுகளில் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ துஷிபரன் சர்மா, உட்பட குருக்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்த அடியார்களே கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here