கொட்டக்கலை பிரதேசத்தில் இந்து குருமார்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தான பிரதம குரு சிவ ஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கொட்டக்கலை தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் குருமார்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அதேபோல சமூகத்தில் பல சாவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.இதிலிருந்து எவ்வாறு மீண்டெழுவது இப்பிரச்சனையை தற்போது சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக்குறித்த கலந்துரையாடலில் கொட்டக்கலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன்,திம்புள -பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர், வர்த்தக சங்க முக்கியஸ்தர்கள் உட்பட கொட்டக்கலை பிரதேச இந்து குருமார்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்