கொட்டகலை பொது வைத்தியர சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தராகவன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களுக்கு வருகைதர முடியாத முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கே இவ்வாறு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்கப்பட்டுவருகின்றது.
குறிப்பாக கொட்டகலை மற்றும் தலவாக்கலையில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் இதன்மூலம் பயன்பெற்றுவருகின்றனர் எனவும் பொதுசுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தராகவன் கூறினார்.
அதேவேளை, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறும், முடியாதவர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பான தகவல்கள் உரிய வகையில் வழங்கும் பட்சத்தில் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.