தைப்பொங்கள் நிருநாளை முன்னிட்டு அகில இலங்கை இந்து மகா சங்கம், மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் சுய சக்தி நிறுவனம் ஆகியன இனைந்து ஏற்பாடு செய்துள்ள பொங்கள் விழா எதிர்வரும் 18.01.2019 கொட்டகலை நகர் விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெறவுள்ளதுமலையக கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் விளையாட்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளது
நிகழ்வில் தப்பு,உடுக்கை, உருமி,கரகம்,காவடி,
ஒயிலிட்டம்,பொய்கால்குதிரை,
கும்மி,கோலாட்டம்,சிலம்பாட்டம்,
ஓய்வு பெற்ற ஆணழகர் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் கோலம் போடுதல், பொங்கள் வைத்தல் மாலைக்கட்டுதல்,தோரனை கட்டுதல்போன்ற போட்டிகளும் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாடு குழுவினர் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா