கொட்டகலை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவரும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த மூவரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலியா மாட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கியும் ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கியும் சென்ற குறித்த மோட்டார் சைக்கிள்கள் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதேநேரம் விபத்தில் சிக்குண்ட மோட்டார் சைக்கிள்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் திம்புள்ளை- பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.