கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் மூன்று நாட்டகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கு சைனோபார்ம் முதலாம் இரண்டாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத்தலைவர் ராஜமணி பிரசாhத் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்தினை துரித படுத்துமாறு ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருடைய ஆலோசனையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்புனர் மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.ஆகவே இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு உரித்துடைய அனைவரும் வந்து முதலாம் இரண்டாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து கொட்டகலை பொது வைத்திய அதிகார பிரிவின் வைத்திய உத்தியோகஸ்த்தர் வைத்திய கே.சுதர்சன் கருத்து தெரிவிக்கையில்.
கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்கு ஒரு தொகை தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைய இன்று போகாவத்த மற்றும் மௌன்ட் வேணன் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் சைனோபார்ம் தடுப்பூசிகள் போகாவத்தை திம்புல்ல பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் 1900 பேருக்கும் வட்டகொடை கிராம சேவகர் பிரிவில் 1300 பேருக்கும், கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவு அலுவலகத்தில் 480 பேருக்கும் இது வரை தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.