நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்த இரண்டாவது
ஒருஇலட்சம்( sinnopom ) கொரோனா தடுப்பூசிகளில், இன்றைய தினம்
இரண்டாம் கட்டமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புற 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட மக்களுக்கு கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந் தலைமையில் இன்று ,திம்புள்ள மற்றும் டிரேட்டன் ஆகிய கிராம சேவகர் பகுதி மக்களுக்கு செலுத்தப்பட்டது இதன் போது சபையின் உப தலைவர் மு.ஜெயகாந்தன், சபை உறுப்பினர் பெ. நேசன் போலீஸ் அதிகாரிகள்.வைத்தியர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களும் பிரஜா சக்தி தன்னார்வ கொண்டார்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பகுதிகளிலுள்ள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.
டி.சந்ரு