இலங்கை முக்குலத்தோர் சங்க சமூக சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் 13.06.2021ம் திகதி வைத்தியசாலை நிர்வாக பிரிவில் அறுவை சிகிச்சைக்கு தேவையான கட்டில்கள் கையளிக்கப்பட்டன.
குறித்த உபகரணங்களை கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பணிப்பாளர். வைத்தியர் சாவித்திரி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த உபகரணங்களுக்காக 650,000 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கை முக்குலத்தோர் சங்க தலைமையக நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட முக்குலத்தோர் சங்க ஒருங்கிணைப்பு குழுவினரும் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இதன் மூலம் தோட்டப்பகுதியினைச் சேர்ந்தவர்களும் நகர் பகுதியை சேர்ந்தவர்களும் நன்மையடைய உள்ளனர்.
கே.சுந்தரலிங்கம்