கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக காணப்பட்டு வந்த குறைபாடுகள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் மக்கள் நலன் சாராத கரிசனையற்ற செயற்பாடுகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் டாக்டர் அசேல பெரேரா உறுதியளித்துள்ளார்.
கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் உத்தியோகஸ்தர்களின் மக்கள் நலன் சாராத கரிசனையற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் முகம் கொடுத்து வரும் அசௌகரியங்கள் சம்பந்தமாக கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், வர்த்தக சங்கத் தலைவருமான புஸ்பா விஸ்வநாதன், கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான சிவசாமி பத்மநாதன், கணபதி கண்ணதாசன், வர்த்தக சங்கத்தின் உப தலைவர் பூவலிங்கம் மற்றும் செயலாளர் மதியழகன் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார அத்தியட்சகர் வைத்தியர் அசேல பெரேராவை சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கமையவே இந்த உத்தரவாதத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
மேற்படி விவகாரத்தை அவசர பிரச்சினையாக எடுத்துக்கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், கடந்த 1 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.இக்கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சுதர்சனன், மாவட்ட வைத்தியர் டாக்டர் உதாரிக்கா உட்பட பல்வேறு வைத்தியர்கள் கலந்து கொண்டனர். பொது மக்கள் சார்பாக கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பா விஸ்வநாதன், வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் ஆம்புலன்ஸ்