கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 25 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
நேற்று (04) திகதி இரவு வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படியே இந்த தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் 119 பேருக்கு பி.சி.ஆர் எடுக்கப்பட்டதாகவும் அதில் 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர்களுடன் நெருக்கமான உறவினை பேணியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர்கள் யுலிபீல்ட் பகுதியில் 07 பேரும், யதன்சைட் பகுதியில் 02 பேரும், சென் கிளையார் பகுதியில் 03 பேரும், பத்தனை பகுதியில் 3 பேரும், ரொசிட்டா பகுதியில் 03 பேரும் உட்பட 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென் கிளையார் தோட்ட குமஸ்த்தா ஒருவருக்கும் பத்தனை பகுதியில் கம்பனி ஒன்றில் மூன்று பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குமஸ்த்தா வேலை செய்த அலுவலகம் கம்பனி ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோகர்கள் துணை மருத்துவர்கள் தற்போது வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் கொரோனா தொற்றாளர்கள் தனிமைப்படுத்துவது பி.சி.ஆர் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் தாமதமாவுதும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்