கொட்டக்கலையில் சமூக சேவைகளை முன்னெடுப்பதற்கான அமைப்பாக விஸ்வ சக்தி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இவ் விஸ்வ சக்தி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
கொட்டக்கலையில் திம்புளை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட செயலமர்வின் போதே விஸ்வ சக்தி அமைப்பும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இதன் மூலம் தொடர்ந்து வரும் காலங்களில் கொட்டக்கலை பகுதியில் பாரிய அளவிலான சமூக சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்