கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 04/12/2021 சனிக்கிழமை இடம்பெற்றது.
டெங்கு நோய் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாடசாலையை சுற்றிய வளாகத்தில் உள்ள நீர்த்தேங்கும், தேங்கியுள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதோடு சிரமதான பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டக்கலை சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தர் ராகவன் குறிப்பிட்டார்.
இதன்போது பாடசாலை பழைய மாணவர்கள்,அதிபர்,ஆசிரியர்கள் உட்பட கொட்டக்கலை பிரதேச சபை உறுப்பினர்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதோடு தொடர்ந்தும் கொட்டக்கலை பகுதி பாடசாலைகளுக்கு சிரமதான பணியை முன்னெடுக்கப்படவிருப்பதாக எஸ்.சௌந்தர் ராகவன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்